ஈரானில் இடம்பெறவுள்ள முக்கிய தாக்குதல் : திரைமறைவில் காய் நகர்த்தும் இஸ்ரேல்
இஸ்ரேலுக்கும் (Israel) ஈரானுக்கும் (Iran) இடையிலான மோதல்கள் வலுத்துள்ள நிலையில் எதிர்வரும் வியாழன் இரவு மற்றும் வெள்ளி அதிகாலையில் ஈரானில் சில ஆச்சரியங்களைக் காண முடியும் என அமெரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதர் தெரிவித்துள்ளமை ஈரானுக்குள் சில முக்கிய தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற ஊகங்களை எழுப்பியுள்ளது.
குறிப்பாக ஈரான் அணுக்குண்டுத் தயாரிப்புக்குத் தேவைப்படும் யுரேனியச்செறிவூட்டலை செய்யும் ஈரானின் முக்கிய அணுநிலையமான ஃபோர்டோ அழிக்கப்படக்கூடும் என்ற ஊகங்களையும் இந்தக்கருத்து வெளிப்படுத்தியுள்ளது.
தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 100 மைல் தொலைவில் உள்ள மலைகளுக்கு இடையே மறைவான ஒரு இடத்தில் உள்ள இந்த நிலையம் நிலத்துக்கு கீழே 90 மீற்றர் ஆழத்தில் உள்ளது.
இவ்வாறன கடும் பாதுகாப்புடன் உள்ள நிலைகளை அழிக்க இஸ்ரேலிடம் மட்டுமல்ல உலகில் அமெரிக்காவை தவிர நிலத்தில் 90 மீற்றர் ஆழத்தை துளைத்து வெடிக்கும் வகையிலான பங்கர்பேஸ்டர் (பதுங்கு குழி தகர்ப்பு) ரக குண்டுகள் இல்லை.
இந்த நிலையில் ஈரானின் இந்த நிலையம் மீது அமெரிக்கா தனது 15 தொன் எடையுள்ள (13>600 கிலோ ) GBU-57A/B பங்கர் பேஸ்டர் குண்டுத்தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வந்துள்ளன.
இந்த பங்கர் பேஸ்டர் ரக குண்டு அதன் பாரிய எடை காரணமாக அணுக்குண்டு வீச்சுக்கு பயன்படும் B-2 ஸ்பிற் ரக பெரிய குண்டுவீச்சு விமானங்களால் மட்டுமே காவிச்செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
