இராணுவ பலம் அதிகம் உள்ள நாடுகள்! முதலிடம் எந்த நாட்டுக்குத் தெரியுமா
ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் அதன் பலமாக திகழ்வது நிச்சயமாக அந்த நாட்டின் இராணுவம் தான், அந்தவகையில் உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளும் தமது இராணுவத்தை பலப்படுத்த வெவ்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
அதன் அடிப்படையில், உலகளவில் சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட நாடுகளின் பட்டியலை குளோபல் பயர்பவர் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டும் (2024) துருப்புக்களின் எண்ணிக்கை, இராணுவ உபகரணங்கள், நிதி நிலைத்தன்மை, புவியியல் இருப்பிடம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட காரணங்களை ஆராய்ந்து உலகளவில் இராணுவ வலிமை கொண்ட நாடுகளின் தர வரிசையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா முதலிடம்
அந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்து உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்டுள்ள நாடாக தன்னை நிரூபித்துள்ளது.
அடுத்ததாக 2-வது இடத்தில் ரஷ்யாவும், 3-வது இடத்தில் சீனாவும் உள்ளது.
அதற்கு அடுத்த இடத்தில் அதாவது 4-வது இடத்தில் இந்தியா இருக்கிறது, மேலும், தென்கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், துருக்கி, பாகிஸ்தான் இத்தாலி ஆகிய நாடுகள் முறையே 5 முதல் 10-வது இடங்களைப் பிடித்துள்ளன.
பலம்குறைந்த இராணுவம்
சக்திவாய்ந்த இராணுவம் ஒருபுறமிருக்க அதன் மறுமுனையான உலகில் பலம்குறைந்த இராணுவத்தை கொண்ட நாடுகளும் இங்கே அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், பூட்டான் முதலிடத்தில் உள்ள நிலையில், மால்டோவா, சுரினாம், சோமாலியா, பெனின், லைபீரியா, பெலிஸ், சியரா லியோன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 10-வது இடத்தில் உள்ளன.
குளோபல் பயர்பவர் வெளியிட்ட இந்த பட்டியலில் 145 நாடுகளின் இராணுவ பலம் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |