ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி நேற்று (19) வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாவை பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் செலவிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்ச தொகை
அதன்படி, ஒரு வேட்பாளர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1,868,298,586.00 (ஒரு பில்லியன், எண்ணூற்று அறுபத்தெட்டு மில்லியன், இருநூற்று தொண்ணூற்று எட்டாயிரத்து ஐந்நூற்று எண்பத்தி ஆறு ரூபாய்) மட்டுமே என்று வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தொகை அதிகரிக்க வேண்டும் என வேட்பாளர்கள், தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறிப்பாக ரணில் விக்ரமசிங்க(Ranil wickremesinghe) மற்றும் சஜித் பிரேமதாச(Sajith premadasa) ஆகியோர் ஒரு வாக்காளருக்கு 250 ரூபாயையும், நாமல் ராஜபக்ச வாக்காளர் ஒருவருக்கு 300 ரூபாயையும், அனுரகுமார திசாநாயக்க(Anurakumara Dissanayake) 200 ரூபாயையும் கோரியிருந்தனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |