தேர்தல் தொடர்பில் மௌனம் காக்கும் ரணில்: மொட்டுக்கட்சி குற்றச்சாட்டு
அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இதுவரையில் உறுதியான பதிலை வழங்கவில்லை என மொட்டுக் கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவும் (Basil Rajapaksa) நேற்று (13) அதிபர் ரணிலை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக மொட்டு கட்சி குறிப்பிட்டுள்ளது.
கட்சியின் நிலைப்பாடு
இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை 07 சுற்றுப் பேச்சுக்கள் பசில் ராஜபக்சவுக்கும் அதிபருக்கும் இடையில் நடத்தப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் பசில் ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.
பிரச்சார வேலைத்திட்டம்
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 26ஆம் திகதி அனுராதபுரம் கலாவெவ தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அன்றிலிருந்து தேர்தல் பிரச்சார வேலைத்திட்டம் தொகுதிவாரியாக ஆரம்பிக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |