மற்றுமொரு பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sumithiran
தற்போது நிலவும் பாதகமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தரம் 12 மாணவர்களுக்கான 2025 பொதுத் தகவல் தொழில்நுட்பத் பரீட்சையை ஜனவரி 11, 2026 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை அறிவித்துள்ளார். இடர் நிலைமைக்குட்பட்ட பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாதிருப்பின் தமது பாடசாலை அதிபருக்கு அறிவிக்க வேண்டும்.
அதிபர்களின் கடமை
அதிபர்கள் தமது பாடசாலைப் பரீட்சார்த்திகள் இடர் நிலைமைக்குட்பட்டிருப்பின் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர், பரீட்சை ஆணையாளர் (பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேறு) ஆகியோருக்கு அறிவிக்க வேண்டும்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்