சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk பகுதிக்குச் சென்று, பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
பெறுபேறுகள் தொடர்பான விசாரணைகள்
இப்பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் இருப்பின், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் '1911' என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 0112-784208, 0112-784537 மற்றும் 0112-785922 ஆகிய இலக்கங்களுக்கும் தொடர்புகொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, 2026 பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெற்றிருந்த நிலையில் ஜூன் மாதம் பரீட்சைப் பெறுகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |