உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி வரை செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம்
செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலைகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி நிறைவடைந்தது.
இப்பரீட்சைக்கு இம்முறை மொத்தமாக 372,310 பரீட்சாத்திகள் தோற்றியிருந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகளை இவ்வாண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |