ஐபிசி தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்
2026ஆம் ஆண்டின் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை இன்று (15) கொண்டாடிக்கொண்டிருக்கும் ஐபிசி தமிழ் உறவுகள் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் ஐபிசி தமிழ் குடும்பம் மகிழ்ச்சியடைகின்றது.
தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் சான்றோர் கூற்றுக்கு அமைய பிறந்திருக்கும் இந்த புத்தாண்டு சந்தோசமானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக் கொள்கிள்றோம்.
தமிழர் வாழ்வியல் வரலாற்றில் உழவர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக மார்கழி மாதத்தின் இறுதி நாளிலும் தை மாதத்தின் முதல்நாளிலும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படுகின்றது.
இந்த நாள் சந்தோசமான நாளாக அமைய வேண்டும் என வாழ்த்துவதுடன் இந்த ஆண்டும் தொடர்ந்தும் ஐபிசி தமிழுடன் இணைந்திருங்கள்.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |