2027 பரீட்சைகளுக்கான திகதிகள் - பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பரீட்சைகள்
அதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L) ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (GIT) ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனிடையே, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை (O/L) டிசம்பர் 7ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |