கண்டி வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
கண்டி (Kandy) மாவட்டத்தின் பல பகுதிகளில் 22 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர் விநியோகத் தடை இன்று (08) முற்பகல் 6.00 மணி முதல் நாளை (09) அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கும் என அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் மஹாவலி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்புப் பணி காரணமாக நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளளது.
நீர் விநியோகத் தடை
இதன்படி, அஸ்கிரிய (மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதி), வேகிரிய, பல்லேமுல்ல (புதிய மற்றும் பழைய யடிஹலகல), கொண்டதெனிய, ரஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம், மெதவல (பழைய) சேவை நீர்த்தேக்கம், கஹவத்த.

குருகொட, புளுகொஹதென்ன, கிராகடுவ, கஹல்ல, தெலம்பு கஹவத்த, நுகவெல, பலனகல, மெதவல (புதிய) சேவை நீர்த்தேக்கம், கலகெதர மற்றும் மாவத்தகம ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
நீர் விநியோகத் தடையால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 19 மணி நேரம் முன்