தேர்தலை குழப்புவதற்கான ஏற்பாடுதான் 22 ஆவது திருத்த சட்டமா! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி
தற்போது 22 ஆவது திருத்த சட்டம் தேவையா? இது தேர்தலை குழப்புவதற்கான ஏற்பாடா? எனும் சந்தேகங்கள் தற்போது பலரிடம் ஏற்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்(Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவர உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையானது, சில நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு என 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதற்காகவே, அவ்வாறு அபிவிருத்திக்கு என கோடிக்கணக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட கூடியவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி வந்து 13ஆம் திருத்தம் தருவோம் என்கிறனர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |