இந்தியாவில் அதிகாலையில் கோர விபத்து - 25 பேர் உடல் கருகி பலி
இந்தியாவில் (India) தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் பலியானதாகவும் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து
பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், மோட்டார் சைக்கிள் பேருந்துக்கு அடியில் சென்றதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 42 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் நல்ல உறக்கத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், 12 பேர் சிறிய காயங்களுடன் பேருந்தின் அவசரகால வழி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். தற்போது வரை 25 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகரிக்க கூடும் என அச்சம்
இறந்தவர்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் ஒருவர் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் சுமார் 19 பயணிகள், இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் உயிர் தப்பின என்று கர்னூல் ரேஞ்ச் டிஐஜி கோயா பிரவீன் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்
எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பேருந்து தீப்பிடித்த உடனேயே பேருந்து ஓட்டுநர் உள்பட பேருந்து ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |