பூஸா சிறைச்சாலையில் சிறப்பு சோதனை: சிக்கிய பெருமளவு கைபேசிகள்
கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டன.
நேற்று (09) காலை 6.00 மணியளவில் சிறைச்சாலை புலனாய்வு மற்றும் தந்திரோபாயப் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்புப் பணிக்குழு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி பிரிவுகளில் இந்த கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிறப்பு பிரிவு கைதிகளின்
சிறப்புப் பிரிவு கைதிகளான “தெமட்டகொட சமிந்த”, “வெலே சுதா” மற்றும் “மிதிகம ருவான்” ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் ஏ பிரிவிலும் கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜெகத் வீரசிங்க தெரிவித்தார்.
இந்த கையடக்கத் தொலைபேசிகள் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பப்பட உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
