ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஒரு தொகுதி கார்கள்
Hambantota
Singapore
vehicle imports sri lanka
By Sathangani
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது தொகுதி வாகனங்கள் சமீபத்தில் நாட்டை வந்தடைந்துள்ளன.
அம்பாந்தோட்டை (Hambantota) சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்த Glovis Century கப்பலில் இருந்து 1,159 கார்கள் இறக்கப்பட்டன.
அவற்றில் 669 கார்கள் மீள் ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள கார்கள்
மீதமுள்ள 490 கார்கள் இலங்கை இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் உள்ள 462 கார்களும் BYD வகையான கார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரியக் கொடியுடன் பயணித்த Glovis Century கப்பல், சிங்கப்பூரிலிருந்து இலங்கையை வந்தடைந்த பின்னர் ஓமானில் உள்ள சோஹர் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
3 வாரங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்