அநுராதபுரத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி
அநுராதபுரம் கெபிதிகொல்லேவ, கோனமரிவ கோயில் அருகே வாகன விபத்தில் 10 நாள் பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை (27.08.2026) இடம்பெற்றுள்ளது.
பதவி ஸ்ரீபுர பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும், அனுராதபுரத்திலிருந்து கெபிதிகொல்லேவ நோக்கிச் சென்ற வாடகைக் காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூவர் பலி
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, அவரது தாயார் மற்றும் 10 நாள் குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கெபிதிகொல்லேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11