இளைஞன் மீது தாக்குதல் : தப்பிச் சென்ற டீச்சர் அம்மாவை கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்கள்
இணைய வழி மூலம் புலமைப்பரிசில் வகுப்புகளை நடத்தும் 'டீச்சர் அம்மா' என்ற புனைபெயரால் அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ, ஒரு இளைஞனின் அடி வயிற்றில் பல முறை உதைத்ததாகக் தெரிவிக்கப்படும் நிலையில் அவரை கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் தனது தொலைபேசியையும் அணைத்துவிட்டு தனது மகளுடன் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பழிவாங்கும் விதமாக இளைஞன் மீது தாக்குதல்
தாக்கப்பட்ட இளைஞனின் சகோதரி, ஹயேஷிகா குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டதற்கு பழிவாங்கும் விதமாக, சந்தேக நபர், அவரது கணவர் மற்றும் அவரது நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் அந்த இளைஞனைத் தாக்கியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம், ஹயேஷிகா பெர்னாண்டோவின் கணவர் மற்றும் மேலாளரை கட்டான காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நாளை (14) வரை அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர்.
பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்
ஹயேஷிகா பெர்னாண்டோவின் கணவரும் மேலாளரும், அந்த இளம் பெண்ணுடன் சேர்ந்து, கட்டான காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்திருந்தார். தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளம் பெண்ணுக்கு கணினியை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக் கொடுக்கச் சொன்னதற்காக, அந்த இளைஞன் அந்த இளம் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து அவர்கள் புகார் அளித்தனர்.
இரு தரப்பினரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், காவல்துறை விசாரணையில், அந்த இளைஞன், ஹயேஷிகா பெர்னாண்டோ என்ற பெண், அவரது கணவர் மற்றும் அவரது மேலாளர் ஆகியோரால் தாக்கப்பட்டதாக தெரியவந்தது.
மகளுடன் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்ற டீச்சர் அம்மா
அதன்படி, ஹயேஷிகா பெர்னாண்டோவின் கணவர் மற்றும் மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், மேலும் ஹயேஷிகா பெர்னாண்டோவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றபோது, அவர் தனது மகளுடன் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
