ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் பலி

Sri Lanka Army Russo-Ukrainian War Sri Lankan Peoples Ukraine Russia
By Sathangani Dec 07, 2023 03:50 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் நேற்று (06) நடத்தப்பட்ட ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த உக்ரைன் கூலிப்படை உறுப்பினரான கெப்டன் ரென்டீஸ் எனப்படும் அன்ரூ ரனிஸ் ஹேவகே தமது தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவ உறுப்பினர்களின் ரெலிகிராம் கணக்கில் தகவல் பகிரப்பட்டிருந்தது.

இதேவேளை உக்ரைனுக்காக போரிட்ட மேலும் இரண்டு இலங்கையைச் சேர்ந்த கூலிப்படை உறுப்பினர்களும் தமது தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டக்கல்லூரி தொடர்பில் அதிபர் ரணில் விடுத்துள்ள பணிப்புரை

சட்டக்கல்லூரி தொடர்பில் அதிபர் ரணில் விடுத்துள்ள பணிப்புரை


சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியவர்

உயிரிழந்த உக்ரைன் சிப்பாய்களின் சடலங்களை வெளியில் எடுத்துச்செல்ல இவர்கள் மூவரும் முயற்சித்தபோது, தாம் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்ததாக ரஷ்ய இராணுவத்தினர் கூறியுள்ளனர். உக்ரைனில் உள்ள பக்முத் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் பலி | 3 Sl Serving In The Ukrainian Army Killed Russian

கெப்டன் டென்டீஸ் என்ற பெயரில் உக்ரைனுக்குள் பிரபலமடைந்திருந்த அன்ரூ ரனிஸ் ஹேவகே சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரியாக செயற்பட்டுள்ளதை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.

இவர் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி லெப்டினன்டாக இராணுவ சேவையில் இருந்து விலகியுள்ளதுடன், அன்றைய நாளில் அவர் உத்தியோகபூர்வ பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழிலுக்கு சென்ற அவர் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உக்ரைனின் சர்வதேச இராணுவ லீக் எனும் பிரிவில் இணைந்து செயற்படத் தொடங்கியிருந்தார்.

நீர் கட்டணத்திற்கான விலைச்சூத்திரம் தொடர்பில் வெளியான தகவல்

நீர் கட்டணத்திற்கான விலைச்சூத்திரம் தொடர்பில் வெளியான தகவல்


உக்ரைன அதிபர் வழங்கிய பதவி 

ரஷ்யாவுடன் நடைபெறுகின்ற யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உக்ரைன் அதிபர்  வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வெளிநாட்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், அவர்கள் அதற்காக சர்வதேச இராணுவ லீக்கை ஸ்தாபித்தனர்.

ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் பலி | 3 Sl Serving In The Ukrainian Army Killed Russian

உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தில் முன்னரங்க பாதுகாப்பு வலய கட்டளை அதிகாரியாக ரனீஸ் சேவையாற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரனீஸ் ஹேவகே உக்ரைனில் வெயிப்படுத்திய திறமைகள் காரணமாக உக்ரைன் அதிபர் அவருக்கு இராணுவ பதவி நிலை அதிகாரியாக பதவி உயர்வு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த, உக்ரைன் இராணுவத்தில் இணைந்து செயற்பட்டிருந்த ஏனைய இரண்டு இலங்கையர்கள் தொடர்பாகவும் இன்று வரை தகவல்கள் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்

ஜனவரி முதல் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் மேற்கு

22 Dec, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008