நீர்கொழும்பு பகுதியில் 30 சீன பிரஜைகள் கைது: வெளியான காரணம்
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (Criminal Investigation Department) 30 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பில் (Negombo) உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளனர்.
இணையவழியில் பணம் மோசடி
அத்துடன், இணையவழியில் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் நேற்று (28) வரை 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |