கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையின் நிலவரம்!
Middle East
World
Strait of Hormuz
Iran-US Conflict
By Dhilak
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 32 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்போது பாரசீக வளைகுடாவுக்குள் ஏழு எண்ணெய் டாங்கர்கள் மற்றும் 10 சரக்குக் கப்பல்கள் உட்பட மொத்தம் 17 கப்பல்கள் நுழைந்துள்ளன.
இதேவேளையில், 10 எண்ணெய் டாங்கர்கள் மற்றும் ஐந்து சரக்குக் கப்பல்கள் உட்பட மேலும் 15 கப்பல்கள் வளைகுடாவை விட்டு வெளியேறியுள்ளன.
கப்பல் போக்குவரத்து
இந்த எண்ணிக்கையானது கடந்த சில வாரங்களாகக் காணப்பட்ட கப்பல் போக்குவரத்து ஓட்டத்துடன் ஒத்துப்போவதாக அமைந்துள்ளது.

எனினும், இந்தப் போர் தொடங்குவதற்கு முன்னர், நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 110 கப்பல்கள் இந்த நீரிணையை கடந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்