சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
எந்தவித சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் மேலும் விசாரணைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதன்படி, இவ்விடயம் தொடர்பில் விசேட பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் முன்வைக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஏகமனதாக தீர்மானம்
இது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஏகமனதாக தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான பிரேணையை இறுதி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, எதிர்க்கட்சியினர் கூடிய விரைவில் குறித்த பிரேரணையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், தெற்கில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாக விசாரணைகளில் வெளியானது. நாடாளுமன்றத்திலும் இவ்விடயம் விவாதத்திற்குட்பட்டது.
இதனைத்தெடர்ந்து, குறித்த சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கோரி, எதிர்க்கட்சிகளால் விசேட பிரேரணை முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
