செல்வம் எம்பியின் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் குரல் பதிவுகள்: உறைய வைக்கும் பின்னணி
உயிரிழந்த ஜெயராம் சுரேஷிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மேலும் 33 குரல் பதிவுகள் இருப்பதாக ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர் என்.கே விந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “செல்வம் அடைக்கலநாதனின் மோசமான மேலும் பல குரல் பதிவுகளை நானே கேட்டுள்ளேன்.
அந்த குரல் பதிவுகளையும் வெளியிட வேண்டும் என கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதனால் கட்சி பெயர் கெட்டு விடும் என்பதாலும் மற்றும் செல்வம் அடைக்கலநாதனை மக்கள் அடித்து விரட்டும் நிலை ஏற்படும் என்பதாலும் அதனை வெளிப்படுத்தவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தின் முழுமையான பின்னணி, செல்வம் அடைக்கலநாதனின் அரசியல் நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |