நாட்டில் களமிறக்கப்படவுள்ள 35,000 காவல்துறை
நாட்டில் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000இற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க (Buddhika Manatunga) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், சிவில் உடையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவல்துறையினர்
மேலும், கொழும்பில் பாதுகாப்புக்காக போக்குவரத்து காவல்துறையினர் உட்பட சுமார் 6,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புத்தாண்டு காலத்தில் சிறுவர்கள் பட்டாசு விபத்துக்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், பட்டாசுகளைப் பயன்படுத்தும்போது அதிக அவதானம் செலுத்த வேண்டும் என்று வைத்திய நிபுணர் டொக்டர் அனுஷா தென்னேகும்புர (AnushaTennekumbura) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
