உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு
Anura Kumara Dissanayaka
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Harini Amarasuriya
By Thulsi
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் க.பொ.த உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மாணவர்களை கௌரவிக்கும் நாடளாவிய வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது கட்டம், இன்று (14) அலரி மாளிகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
மில்லியன் ரூபா பெறுமதி
இதன்போது 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மேல் மாகாண மாணவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

அதன்படி, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 361 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி நிதியத்தால் 36.1 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 5 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்