பேராறில் படுகொலை செய்யப்பட்ட 11 பொதுமக்கள்! 37 வது நினைவேந்தல்
Sri Lankan Tamils
Trincomalee
NPP Government
By Dhilak
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் -பேராறு கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது.
1990.07.31 அன்று இடம்பெற்ற இவ் படுகொலைச் சம்பவத்தில் 11 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இப் படுகொலைக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
இந்த நிலையில், குறித்த படுகொலையை நினைவு கூறும் வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரால் விளக்கேற்றி, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, அஞ்சலியும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்