யாழில் இடம்பெற்ற மண்டைதீவு படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல்
Tamils
Jaffna
Sri Lanka Navy
By Sathangani
மண்டைதீவு கடலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் (Jaffna) - குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 பேரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வானது இடம்பெற்றது.
இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள், கிறிஸ்தவ மதகுருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
31 பேர் படுகொலை
இதன்போது படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் அஞ்சலியும் செலுத்தினர்.
1986ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் 31 பேரும் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் (Sri lankaNavy) படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |






தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 22 மணி நேரம் முன்
இதயபூமி எனப்படும் மணலாற்றை பலியெடுத்த பேரினவாதம்…!
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்