மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இணையசேவை
srilanka
internet
powercut
By Sumithiran
இலங்கையில் மின்வெட்டு பலமணிநேரங்களாக அமுல்படுத்தப்படுவதால் இணைய சேவைகளை வழங்கும் பல கைத்தொலைபேசி நிறுவனங்களில் 3G-4G சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீடித்த மின்வெட்டு மற்றும் போதிய தகவல் தொடர்பு கோபுரங்கள் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பல நிறுவனங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையில் ஒளிபரப்பாகும் பல வெளிநாட்டு அலைவரிசைகள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி