புடினின் அறிவிப்பால் கதிகலங்கியுள்ள உலக நாடுகள்..!
ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் உக்ரைனின் படைகள் பெரிய அளவில் போரில் ஈடுபட தொடங்கின.
இந்த நிலையில், உக்ரைனின் எல்லையையொட்டிய பெலாரஸ் நாட்டில் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களை அந்நாட்டுக்கு ரஷ்யா அனுப்ப முடிவு செய்தது.
இதுபற்றி பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவிக்கையில், ரஷ்யாவிடம் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றின் முதல் பகுதி வந்தடைந்துள்ளது.
ஒரு தடுப்பு நடவடிக்கைக்காகவே இவை குவிக்கப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளார் என தி ஹில் பத்திரிகை தெரிவித்துள்ளது.
3ம் உலக போர்
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டு அரசாங்க ஊடகங்களுக்கு லுகாஷென்கோ வழங்கிய பேட்டியில், ரஷ்யாவிடம் இருந்து பெற்ற ஏவுகணைகளையும் மற்றும் வெடிகுண்டுகளையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.
இந்த வெடிகுண்டுகள், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை என கூறியுள்ளார்.
மேலும், ஐரோப்பா மீது அணுகுண்டு தாக்குதல் உறுதி எனவும் ரஷ்ய மக்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேறுமாறும் ரஷ்யாவின் Segey Karaganov என்பவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்யா கூறியிருப்பது போல ஐரோப்பா மீது தாக்குதல் நடாத்தினால் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் பதிலடி தாக்குதல் நடாத்தும் என்பது வெளிப்படையே..ஆக, ரஷ்யா முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் 3ம் உலக போருக்கு வித்திடும் ஒன்றாகவே காணப்படுகிறது.