யாழில் சிக்கிய சைக்கிள்களை திருடிய கும்பல்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Thulsi
யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 12 சைக்கிள்களை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி