பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு பரவியுள்ள மிக ஆபத்தான நோய்! 4 குழந்தைகள் பலி
இலங்கையில் MIS-C எனப்படும் குழந்தைகளை தாக்கும் வீக்க நோயினால் இதுவரை நான்கு குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட இந்த ஆபத்தான நோய் இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த நோய் 19 வயது வரையிலான பிள்ளைகளை பாதிக்கும் என்று தெரிவித்திருந்தது.
COVID-19 தொற்றுக்கு பிறகு 02 முதல் 06 வாரங்களுக்குள் இந்த தொற்று ஏற்படலாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகளுக்கு வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், உடனடியாக சிகிச்சை பெறவும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிள்ளைகளுக்கு ஏற்படும் MIS-C என்பது இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை, தோல், கண்கள் அல்லது இரைப்பை குடல் உறுப்புகள் உட்பட பல்வேறு உடல் பாகங்கள் வீக்கமடையக்கூடிய ஒரு ஆபத்தான நிலையாகும்.