ஈராக் வைத்தியசாலையில் தீ விபத்து : 4 குழந்தைகள் பலி
ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள திவானியா நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு வைத்தியசாலையில் நேற்று(08) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, அடுத்தடுத்த அறைகளுக்கும் வேகமாக பரவியது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
4 குழந்தைகள் பலி 20 இற்கு மேற்பட்டோர் காயம்
இவ்விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்ததுடன் 20இற்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வைத்தியசாலையில் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 150 நோயாளிகள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அலட்சியமாக இருந்த வைத்தியசாலை அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும்படி ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |