கனடா தேர்தலில் களமிறங்கும் இந்திய வம்சாவளியினர்
கனடாவின் (Canada) நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு இந்திய வம்சாவளியினர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி ஏப்ரல் 28இல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்ததையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களும் வெளியாகிய வண்ணமாக உள்ளது.
கனடா தேர்தல்
அந்தவகையில் வழக்கத்தை விட இந்த முறை கனடா தேர்தலில் குஜராத்தைச் (Gujarat) சேர்ந்த 4 இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் நான்கு பேருமே, இந்தியாவின் குஜராத் மாநில பின்னணிகொண்ட முதலாம் தலைமுறை புலம்பெயர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஜயேஷ் ப்ரம்பத், சஞ்சிவ் ராவல், அஷோக் பட்டேல் மற்றும் மினேஷ் பட்டேல் என்னும் நான்கு பேர்தான் கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆவர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
