காணாமற்போன இந்திய கடற்றொழிலாளர்கள் மீட்பு!
இந்திய (India) மீன்பிடி படகில் இருந்து பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் (Sri Lanka Navy) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் இலங்கையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.
அதற்கமைய, கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சிலாபத்திற்கு அப்பால் மேற்கு கடலில் இந்திய கடற்றொழிலாளர்களின் மீன்பிடி படகு செயலிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

செம்மணி எங்கும் உயிருடன் விதைக்கப்பட்ட மக்கள் - சர்வதேச தலையீடு அவசியம்: இயக்குனர் டி.ராஜேந்தர் கோரிக்கை
மேலதிக நடவடிக்கை
பின்னர் 4 இந்திய கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் இவர்கள் மினிகோய் தீவவைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் 4 பேரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
