வாக்காளர் தரவுகளை சீனாவே திருடியது : பிரித்தானியா பகிரங்கம்
பிரித்தானியாவின் 40 மில்லியன் வாக்காளர்களின் மொத்தத் தரவுகளும் கணனி தரவுத் திருடர்களால் (hackers) திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2021 ஆண்டு பிரித்தானிய தேர்தல் ஆணையம் மீது நடந்த சைபர் தாக்குதலிற்கான காரணகர்த்தாக்கள் சீனா என்றே முதலில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சீனாவின் பங்கை பகிரங்கப்படுத்தி, நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மீது குற்றச்சாட்டு
இந்த விவாதத்தின் போது சீனாவின் கணனி தரவுத் திருடர்களால் (hackers) அரசியல்வாதிகள் குறிவைக்கப்பட்டுள்ள விடயத்தை குறிப்பிட்டு அவர்களை எச்சரிக்கவுள்ளதாக பிரித்தானியாவின் துணைப் பிரதமர் ஒலிவர் டவுடன் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி பிரித்தானியாவின் வெளிவிவகாரத்துறை அலுவலகமானது பல சீன சந்தேக நபர்களை உத்தியோகபூர்வ தடுப்புப்பட்டியலில் சேர்க்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மாத்திரமல்லாமல், இதுபோன்ற சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட அமெரிக்காவும் சீனா மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைபர் தாக்குதல்
இந்நிலையில், கடந்த ஆண்டு (2023) ஒகஸ்ட் மாதம் பிரித்தானியாவில் சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்திலும் சீனாவே ஈடுபட்டுள்ளதாக சீனா மீது உத்தியோகப்பூர்வமாக பிரித்தானியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |