மாத்தறையில் இரு பேருந்துகள் மோதி பாரிய விபத்து : 40 பேர் காயம்
Sri Lanka Police
Matara
Sri Lanka Police Investigation
By Sathangani
மாத்தறை - தலல்ல வீதியின் வஜிர வம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலியிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன.
காவல்துறையினர் விசாரணை
விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் பதிகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 19 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்