நேற்று உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது
corona
sri lanka
people
By Shalini
நாட்டில் நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,142 ஆக அதிகரித்துள்ளது.
30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 03 ஆண்களும் 01 பெண்ணும்,
60 வயதுக்கு மேற்பட்ட 19 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.