நீதிமன்றத்தை நாடவுள்ள பருத்தித்துறை நகரசபை... ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்..!

Jaffna Law and Order Local government election Sri Lanka 2025
By Erimalai Oct 30, 2025 11:27 AM GMT
Report

பருத்தித்துறை நகரசபையினாரால் பணியாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற 40 வீத சம்பள அதிகரிப்புக்கு நிதியின்மை காரணமாக சபையால் நிதி வழங்க முடியாதுள்ளதாகவும் இதனால் நீதிமன்றை நாடுவதென்று தீரமானிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு அதன் தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று (30) காலை 9:15 மணியளவில் ஆரம்பமானபோது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது முதலாவதாக கடந்த கூட்ட அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

சிறிலங்கா காவல்துறையின் உள்ளக சர்ச்சைகள் அம்பலம்! ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்

சிறிலங்கா காவல்துறையின் உள்ளக சர்ச்சைகள் அம்பலம்! ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்

ரிட் சவாலுக்கு உட்படுத்துதல்

இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வீதிகளின் ஓரங்களை செப்பனிடுதல், வீதி விளக்குகளை விரைவாக பொருத்துதல், நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அறநெறி பாடசாலைகள் உருவாக்குவதை ஊக்குவித்தல், இலங்கை போக்குவரத்து சபைக்கு நவீன சந்தை தொகுதி அமைந்துள்ள பகுதியில் அலுவலகம் ஒன்றினை அமைத்துக் கொடுத்தல், வாடகை முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துதல், வரி அறவிடுதல், நவீன சந்தைப்பகுதியில் தனியார் அரச பேருந்து தரிப்பிடம் போன்றவற்றை பருத்தித்துறை காவல்துறையினர் கண்காணித்தல் ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டன.

நீதிமன்றத்தை நாடவுள்ள பருத்தித்துறை நகரசபை... ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்..! | 40 Percent Salary Increase Employees Pointpedro Uc

அத்துடன் சபை தீர்மானங்களை ஒழுங்கமைத்தல், நவீன சந்தை பகுதியின் மேல் பகுதி மழை நீர் ஒழுக்கு ஏற்படுவதாகவும் அதனை நிரந்தர தீர்வாக எட்டுவதற்குரிய நடவடிக்கை எடுத்தல், ஊழியர்களுக்கான 40 வீதமான கொடுப்பனவு அதிகரிப்பை வழங்கவேண்டும் என்று வழங்கப்பட்ட சுற்றுநிருபம் தொடர்பாக ஆராயப்பட்டு அதனை வழங்குவதற்கு நிதி சபையிடம் இல்லை என்றும் இதனால் மத்திய அரசின் சுற்றுநிருபத்தை மன்றினூடாக ரிட் சவாலுக்கு உட்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை மரக்கறி சந்தையை பழைய இடமான நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுமாறு கோரி அண்மையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் வர்த்தகர்களால் வழங்கப்பட்ட மகஜர் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

தான் நிரபராதி என நீதிமன்றில் அறிவித்த டயானா : ஆரம்பமான சாட்சி விசாரணைகள்

தான் நிரபராதி என நீதிமன்றில் அறிவித்த டயானா : ஆரம்பமான சாட்சி விசாரணைகள்

சந்தையை பழைய இடத்திற்கு மாற்றும் தீர்மானம்

அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் சமர்ப்பணங்கள், கட்டளை தொடர்பாக நகரசபை உறுப்பினர் சந்திரசேகர் வாசித்து தனது வாதங்களை முன்வைத்தார்.

அதற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து ஜெயகோபி தனது கருத்தில் அங்கு ஒருவழிப் பாதை, சிறிய வீதி, நீர் தேங்குமிடம் போன்றவை நிவர்த்தி செய்ய முடியாத குறைபாடுகளாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்தை நாடவுள்ள பருத்தித்துறை நகரசபை... ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்..! | 40 Percent Salary Increase Employees Pointpedro Uc

இந்தநிலையில் சபையினால் சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுவதென தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு சபையால் நவீன சந்தை பகுதியில் கீழ் தளத்தில் அமைப்பது தொடர்பாக ஆய்வுக்காக நிபுணர்குழு ஒன்று நியமிக்கப்பட்டதாகவும் அதன் முடிவு வரும்வரை ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

நகரசபையின் கழிவகற்றல் தொடர்பாக ஆராயப்பட்டு உரிய தரப்புக்களை அணுகி கழிவகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும், முனை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகத்தில் சிறுவர்களை வீதிக்கு செல்லாது பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது என்றும், அங்கு சிறுவர்களுக்குரிய பூங்கா என அறிவிப்பதென்றும், சபைக்கான சட்டத்தரணி ஒருவரை ஏல அடிப்படையில் பணிக்கு அமர்த்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டதுடன் பல்வேறு நிதிசார் கொடுப்பனவு தீர்மானங்ளும் நிறைவேற்றப்பட்டன.

இந்த அமர்வில் பருத்தித்துறை நகர சபையின் 14 உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்!

உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017