யாழ். பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா : 4 நாட்களில் 12 அமர்வுகள்

University of Jaffna Sri Lanka Sri Lankan Peoples Education
By Theepan Feb 17, 2026 10:55 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் (19) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு நேற்று (16) துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில், பல்கலைக்கழக சபை அறையில் நடைபெற்றது.

இதன் போது முன்னாள் கலைப்பீடாதியும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்குழுத் தலைவருமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றி விளக்கமளித்தார்.

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு! இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு! இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது

3,252 பேருக்கு பட்டமளிப்பு 

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.

யாழ். பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா : 4 நாட்களில் 12 அமர்வுகள் | 40Th General Convocation University Of Jaffna 2026

இப்பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானபீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், இந்துக்கற்கைள் பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 376 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை எண்மரும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 16 பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை 7 பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை ஒருவரும், பொது நிர்வாகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தை ஒருவரும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப் பட்டத்தை ஒருவரும், கல்வியில் முதுமாணிப்பட்டத்தை 154 மாணவர்களும், நூலக மற்றும் தகவல் விஞ்ஞானத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை 12 மாணவர்களும், கல்வியில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை 118 மாணவர்களும், வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை 42 பேரும் பெறுவதுடன், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பித்தலில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை 16 பேரும் பெறவிருக்கின்றனர்.

மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 137 மாணவர்கள்

உள்வாரி மாணவர்களாக, மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 137 மாணவர்கள் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும்; விவசாயபீடத்தைச் சேர்ந்த 118 மாணவர்கள் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.

இவர்களுடன் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திலிருந்து மருந்தகவியல்மாணி சிறப்புப் பட்டத்தை 49 மாணவர்களும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப்பட்டத்தை 64 மாணவர்களும், தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 46 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

யாழ். பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா : 4 நாட்களில் 12 அமர்வுகள் | 40Th General Convocation University Of Jaffna 2026

அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 358 மாணவர்களும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 11 மாணவர்களும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 107 மாணவர்களும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை இருவரும் பெறவிருக்கின்றனர்.

இவர்களுடன், கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப்பட்டத்தை 333 மாணவர்களும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 182 மாணவர்களும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 29 மாணவர்களும், சட்டமாணியில் சிறப்புப் பட்டத்தை 91 மாணவர்களும், கலைமாணி சிறப்புப் பட்டத்தை (பழைய பாடத்திட்டத்தில்) ஐவரும், கலைமாணிப் (பொது) பட்டத்தை 15 பேரும் பெறவிருக்கின்றனர்.

மேலும், சேர். பொன் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தைச் சேர்ந்த 169 மாணவர்கள்; நடனம், இசை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளில் நுண்கலைமாணிப் பட்டத்தையும், மேலும் நடனம் மற்றும் இசையில் நுண்கலைமாணிப் பட்டத்தை (பழைய பாடத்திட்டத்தில்) ஒவ்வொருவரும் பெறவிருக்கின்றனர்.

இவர்களுடன், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 97 பேர் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 46 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 79 பேர் விஞ்ஞானமாணிப் (பொதுப்) பட்டத்தையும், 18 பேர் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 23 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும்,பெறவுள்ளனர்.

முன்னைநாள் வவுனியா வளாகம்

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் வவுனியா வளாகத்தின் மாணவர்களும் பட்டம் பெற உள்ளனர். அதன்படி பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 24 மாணவர்கள் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 49 மாணவர்கள் சுற்றுச் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 100 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் 47 மாணவர்கள் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 18 பேர் சூழல் விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

யாழ். பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா : 4 நாட்களில் 12 அமர்வுகள் | 40Th General Convocation University Of Jaffna 2026

வியாபாரக் கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 65 மாணவர்கள் கணக்கியலிலும் நிதியியலிலும் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 19 மாணவர்கள் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 29 மாணவர்கள் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 28 மாணவர்கள் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 24 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணிப் (பொதுப்) பட்டத்தையும், 76 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 12 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

மேலும், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 69 மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெற இருக்கின்றனர்.

இவர்களுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் திறந்த மற்றும் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 76 மாணவர்கள் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும், 15 மாணவர்கள் வணிகமாணிப் பட்டத்தையும், 161 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.

மேலும், 21 மாணவர்கள் தமிழ் பாலபண்டிதர் தகைமைச் சான்றிதழ்களையும், 9 பேர் விஞ்ஞானத்தில் உயர் தகைமைச் சான்றிதழ்களையும், 5 பேர் விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், ஒருவர் கலைத்துறையில் உயர் தகைமைச் சான்றிதழையும், 30 பேர் சொத்து மதிப்பீட்டில் தகைமைச் சான்றிதழ்களையும், ஒருவர் வியாபார நிர்வாகத்தில் சான்றிதழையும் பெற்றுக்கொள்வது இப் பட்டமளிப்பு விழாவின் போது உறுதிப்படுத்தப்படும்.

94 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன

மேலும், இப்பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 94 தங்கப்பதக்கங்களும், 69 பரிசில்களும், 15 புலமைப்பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் சீர்பெறும் விருதான பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இதன்படி 2021ம் கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அடிப்படையிலான தங்கப்பதக்கத்தைக் கலைப்பீடத்தைச் சேர்ந்த ஒருவர் பெற்றுக் கொள்கின்றார்.

யாழ். பல்கலையின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா : 4 நாட்களில் 12 அமர்வுகள் | 40Th General Convocation University Of Jaffna 2026

பீடமட்டத்தில் 2022ம் கல்வியாண்டுக்குரிய தங்கப் பதக்கத்தைக் கலைப்பீடத்தில் இருந்து ஒருவரும், விஞ்ஞான பீடத்தில் இருந்து ஒருவரும் பெறுகிறார்கள். பீடமட்டத்தில் 2023ம் கல்வியாண்டுக்குரிய தங்கப் பதக்கத்தை முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து ஒருவரும், மருத்துவ பீடத்தில் இருந்து ஒருவரும் பெறுகின்றனர்.

மேலும், 2022ம் கல்வியாண்டுக்குரிய தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப்பதக்கத்தைப் பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவர் பெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இப்பட்டமளிப்பு வைபவத்துக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகளாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரை பங்குனி மாதம் 5ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை அன்றே பிற்பகல் 4.00 மணிக்கும் இடம்பெறவிருக்கின்றது.

சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரையை ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தொடர்பியல் துறையின் ஓய்வுபெற்ற துணைப் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா, “சமூக ஈடுபாட்டுடன் செயற்படும் பல்கலைக்கழகம்: ஆய்வு, உரையாடல் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த சிந்தனைகள்” என்ற தலைப்பிலும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் குழந்தை மருத்துவத் துறையைச் சேர்ந்த இருக்கைப் பேராசிரியர்; கீதாஞ்சலி சத்தியதாஸ் “அடுத்த தலைமுறையைப் பேணிப் பாதுகாப்பது: குழந்தைகள் ஆரோக்கியம் குறித்த சமகாலக் கண்ணோட்டங்கள்” என்ற தலைப்பிலும் நிகழ்த்தவிருக்கின்றனர்.

இந் நிகழ்வுகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40வது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இனிதே நிறைவு பெறும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கும் வேளையில், 40ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்களால் தான் இது சாத்தியமானது : அநுரவுக்கு பாகிஸ்தான் பாராட்டு

உங்களால் தான் இது சாத்தியமானது : அநுரவுக்கு பாகிஸ்தான் பாராட்டு

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கான அறிவித்தல்

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கான அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015