இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 42 பேர் கைது
நாட்டில் இன்று (17) அதிகாலை முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கொலன்னாவ பகுதியில் பல்வேறு போதைப்பொருட்களை வைத்திருந்த 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவுக்கமைய நாட்டடின் பல்வேறு பகுதிகளில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
காவல்துறையினரின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட சுற்றிவளைப்பின்போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்கள் மீட்பு
அவர்களிடமிருந்து ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வத்தளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 35 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ. 20 மில்லியன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |