அபாய கட்டத்தில் இலங்கை!! 45 இலட்சம் பேர் தொழிலை இழக்கும் நிலை
இலங்கையில் இன்னும் தீவிர நெருக்கடி நிலை ஏற்படவில்லை
இலங்கையில் இன்னும் தீவிர நெருக்கடி நிலை ஏற்படவில்லை. தற்போது பெற்றோல், டீசல், எரிவாயு என்பவற்றுக்கான நெருக்கடி நிலை மாத்திரமே ஏற்பட்டுள்ளதென ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் லலந்த வதுதுர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
45 இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் நிலை
“ எதிர்காத்தில், சிறு மற்றும் மத்தியதர கைத்தொழிலாளர்கள் உட்பட 45 இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாய நிலை உள்ளது.
45 இலட்சம் தொழில்வாய்ப்புகள் தொடர்பில் தான் நான் கருத்து வெளியிடுகிறேன்.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள், நிர்மாணம், விவசாயம் ஆகிய துறைகளின் தொழில்வாய்ப்புகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்புகள் இல்லாது போனால் என்ன நடக்கும்? எனவே அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.
