ஏலத்திற்கு வருகின்றன காவல்துறை நாய்கள்
Sri Lanka Police
Kandy
Auction
By Sumithiran
கண்டியில் உள்ள காவல்துறை நாய்கள் தலைமையகத்தில் பயிற்சி பெற்று, நீண்ட காலமாக காவல்துறை திணைக்களத்தில் அதிகாரபூர்வ நாய்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற காவல்துறை நாய்களின் ஏலம் ஏப்ரல் 5 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை நடைபெறும் என்று நாய்கள் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஏலத்தில் 45 அதிகாரபூர்வ காவல்துறை நாய்கள் ஏலத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள், வெடிபொருட்கள் மற்றும் அவற்றின் வாசனையைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்காணிக்கும் காவல்துறை நாய்கள் இங்கு ஏலம் விடப்படும்.
ஏலத்திற்கு வரும் உலகின் சிறந்த நாய்கள்
அந்த காவல்துறை நாய்களில், லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ், ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ், ரோட்வீலர்ஸ், அலாஸ்கன் மலாமுட்ஸ் மற்றும் டால்மேஷியன்கள் உட்பட பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த உலகின் சிறந்த நாய்களில் 45, அங்கு ஏலம் விடப்பட உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்