தாயை இழந்து பரிதவித்த பாடசாலை மாணவி வன்புணர்வு : குற்றவாளிக்கு 45 வருட கடூழிய சிறை
தனது தாயின் மரணத்திற்குப் பின் நோய்வாய்ப்பட்ட தந்தையைப் பராமரித்து குடும்பத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெடிகே 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்டவருக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
இன்று 21ம் திகதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றவாளியை கைது செய்யுமாறு திறந்த பிடியாணை
ஏற்கனவே ராஜகிரியவில் இருந்து தப்பி ஓடி ஒளிந்திருந்த குற்றவாளியை கைது செய்யுமாறு திறந்த பிடியாணை பிறப்பித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து பயணத்தடையும் விதித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாகத் தீர்மானித்து, ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஹிமாஷ பிரமிந்த கனேகொட என்பவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வன்புணர்விற்கு உள்ளான யுவதி
2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் ராஜகிரிய பிரதேசத்தில் யுவதி ஒருவரை வன்புணர்வு செய்தமை தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பில் இடம்பெற்ற நீண்ட விசாரணையின் போது, வன்புணர்விற்கு உள்ளான யுவதி நீதிமன்றில் சாட்சியமளித்தார். தனது தந்தை வீட்டில் தனியாக தங்கியிருந்ததாகவும், குடும்பத்திற்கு ஆதரவாக இருந்த தனது தாய் திடீரென உயிரிழந்ததாகவும், தாம் மிகவும் அவலநிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வீடொன்றில் வேலை செய்ய
நோய்வாய்ப்பட்ட தந்தையை பராமரிப்பதற்கு நிறைய பணம் தேவைப்பட்டதால் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வேலை செய்யச் சென்றதாக சிறுமி தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை வீட்டைவிட்டு வெளியேறுமாறு மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
தன்னை வன்புணர்வு செய்த பின்னர், கர்ப்பமாகாமல் இருக்க கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தியதாக அந்த இளம் பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |