நாட்டில் உள்ள மதுபானசாலைகளின் எண்ணிக்கை தெரியுமா..! குறைந்தளவு தமிழர் பிரதேசத்தில்

Sri Lanka Sri Lanka Podujana Peramuna Ministry of Finance Sri Lanka
By Jaso Aug 30, 2023 02:57 PM GMT
Report

இலங்கையில் தற்போது 4,570 அனுமதி பெற்ற மதுபானசாலைகள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சு அளித்த பதிலில் மேற்கண்ட விடயம் தெரியவந்துள்ளது.

அதிகளவு கொழும்பு குறைந்தளவு கிளிநொச்சி

நாட்டில் உள்ள மதுபானசாலைகளின் எண்ணிக்கை தெரியுமா..! குறைந்தளவு தமிழர் பிரதேசத்தில் | 4570 Licensed Regular Liquor Shops In The Country

அவற்றுள் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு மதுபானசாலைகள் காணப்படுவதுடன், எண்ணிக்கை 849 ஆகும். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மதுபானக் கடைகளைக் கொண்ட மாவட்டம் கிளிநொச்சி மாவட்டமாகும், அந்த மாவட்டத்தில் 6 மதுபானக் கடைகளே உள்ளன.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 684 மதுபானசாலைகளும், காலி மாவட்டத்தில் 359 மதுபானசாலைகளும், கண்டி மாவட்டத்தில் 307 மதுபானசாலைகளும், நுவரெலியா மாவட்டத்தில் 248 மதுபானசாலைகளும், மாத்தறை மாவட்டத்தில் 207 மதுபானசாலைகளும் உள்ளன.

மேலும் பதுளை மாவட்டத்தில் 197 மதுபானசாலைகள், களுத்துறை மாவட்டத்தில் 185 மதுபானசாலைகள், குருநாகல் மாவட்டத்தில் 175 மதுபானசாலைகள், அனுராதபுரம் மாவட்டத்தில் 155 மதுபானசாலைகள், புத்தளம் மாவட்டத்தில் 152 மதுபானசாலைகள், மாத்தளை மாவட்டத்தில் 148 மதுபானசாலைகள், இரத்தினபுரி மாவட்டத்தில் 135 மதுபானசாலைகள். கேகாலை மாவட்டத்தில் 118 மதுபானசாலைகளும் மொனராகலை மாவட்டத்தில் 113 மதுபானசாலைகளும் உரிமம் பெற்றுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில்

நாட்டில் உள்ள மதுபானசாலைகளின் எண்ணிக்கை தெரியுமா..! குறைந்தளவு தமிழர் பிரதேசத்தில் | 4570 Licensed Regular Liquor Shops In The Country

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 85 மதுபானசாலைகளும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 மதுபானசாலைகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 77 மதுபானசாலைகளும், அம்பாறை மாவட்டத்தில் 72 மதுபானசாலைகளும், திருகோணமலை மாவட்டத்தில் 64 மதுபானசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 30 மதுபானசாலைகளும்,மன்னார் மாவட்டத்தில் 13 மதுபானசாலைகளும் உள்ளன.முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 மதுபானக் கடைகள் உரிமத்துடன் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

இது தவிர, கலால் வரி ஆர்.பி. வகை 11 இன் கீழ் 689 உணவகங்கள், கலால் ரூ. 22பி வகையின் கீழ் 211 உணவகங்களும், மென்மையான மதுபான அனுமதியின் கீழ் 449 உணவகங்களும் தற்போது வழக்கமான மதுபான உரிமத்துடன் 1,349 உணவகங்களை நடத்தி வருகின்றன.

நிதியமைச்சு அளித்த பதில்

நாட்டில் உள்ள மதுபானசாலைகளின் எண்ணிக்கை தெரியுமா..! குறைந்தளவு தமிழர் பிரதேசத்தில் | 4570 Licensed Regular Liquor Shops In The Country

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை கூற முடியாது என சிறி லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சு வழங்கிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இதன்படி, கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் முறை மற்றும் அரசாங்க கொள்கையின் படி, கலால் அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே கலால் அனுமதிப்பத்திரம் வழங்க முடியும் என நிதியமைச்சு அளித்த பதிலில் மேலும் தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026