சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயற்சி - நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்
கடல் மார்க்கமாக, பிரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கையர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் அதிகாரிகளால் நேற்றைய தினம் அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அவர்கள், கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி பலநாள் படகு ஒன்றின் மூலம் பிரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
46 இலங்கையர்கள்
குறித்த படகில் 43 ஆண்களும், பெண்னொருவரும், குழந்தையொன்றும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு மற்றும் சிலாபம் முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, கடந்த வருடத்தில் மாத்திரம், ஆட்கடத்தலில் ஈடுபட்ட 42 படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றிலிருந்து ஆயிரத்து 532 பேர் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த படகுகள் மற்றும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 8 மணி நேரம் முன்
