சிறுவர்களை தகாத முறைக்குட்படுத்த முற்பட்ட நபர் கைது
இளைஞர்கள் இருவரை இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று தகாதமுறைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 46 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தனமல்வில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனமல்வில உடவலவ வீதியில் குக்குல்கடுவ பிரதேசத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த 46 வயதுடைய நபரொருவர் அப்பகுதியில் வசிக்கும் 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களை தகாதமுறைக்குட்படுத்த தூண்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் பிடகோட்டே பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் குக்குல்கடுவ பிரதேசத்தில் சுமார் பத்து ஏக்கர் காணியில் பயிர்ச்செய்கை பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
தகாதமுறை
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களிடம் தனமல்வில நகரில் ஒரு இசை நிகழ்ச்சியை பார்க்கச் செல்வதாகவும் அவ்விருவரையும் வருமாறும் அழைத்துள்ளார்.
அதற்கு பணம் இல்லை என்று அவ்விரு சிறுவர்களும் கூறியதையடுத்து தேவையான பணத்தை தருவதாக கூறி இரு சிறுவர்களையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று நிர்வாண புகைப்படங்களை காண்பித்துள்ளார்.
சந்தேக நபர் கைது
அதன்பின்னர் அவ்விரு இளைஞர்களையும் தகாதமுறைக்குட்படுத்த முயற்சித்ததையடுத்து சம்பவம் தொடர்பில் இரண்டு சிறுவர்கள் தங்களுடைய பெற்றோருக்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து பெற்றோர் தனமல்வில காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |