இலங்கையில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் : வெளியான அறிவிப்பு
இலங்கையில் தற்போது 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது 48 பாதாள உலகக் குழுக்கள் தொடர்ந்தும் தீவிரமாக இயங்கி வருகின்றன. மேலும் 48 குழுக்கள் முடக்கப்பட்டு செயலற்றதாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதா
செயலில் உள்ள மற்றும் செயலிழந்த குழுக்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கும் அதிகமான உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்படாவிட்டால் கைது செய்யப்படும் குற்றவாளிகள் நீதி மன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள்.
இந்த நாடாளுமன்றம் மக்களுக்கு எதிரான மற்றும் ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கத் தயாராக இல்லை. அதன் மூலம் எந்தவொரு ஜனநாயக வழிமுறையும் சீர்க்குலைக்கப்படாது“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |