நௌபர் மௌலவிக்கு மேலும் 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
2018ஆம் ஆண்டு புத்தளம் வனாத்தவில்லு, லக்டோவத்த பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டில், நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன் இணைந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டை இருவரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் நௌபர் மௌலவி குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு, ஏற்கனவே 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |