ஷஷி வீரவன்சவின் தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு அடுத்த மாதம் விசாரணைக்கு
Wimal Weerawansa
Supreme Court of Sri Lanka
Passport
By Sindu
போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக ஷஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனைக்கு எதிரான அவரது மேல்முறையீட்டை நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |