போலி சுற்றறிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு அவசர எச்சரிக்கை!
சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் மூலம் பரப்பப்படும் போலியான மற்றும் மாற்றியமைக்கப்பட்ட அதிகாரபூர்வ சுற்றறிக்கைகள் குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
அதிகாரபூர்வ சுற்றறிக்கைகள் திரிபுபடுத்தப்படுவதும், தவறான தகவல்கள் இணையத்தில் பரப்பப்படுவதும் அதிகரித்து வருவதை அமைச்சு கவனித்துள்ளதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்தகைய தவறான தகவல்கள் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படல்
அதன்படி, தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை மட்டுமே துல்லியமானதாகவும் செல்லுபடியாகும் என்றும் கருதுமாறு பொதுமக்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

போலியான அல்லது மாற்றியமைக்கப்பட்ட சுற்றறிக்கைகளால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும், அத்தகைய தகவல்களை சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |