உச்சம் தொடும் பதற்றம்! சவூதியில் தரையிறங்கவுள்ள அமெரிக்காவின் 48 F-35 போர் விமானங்கள்
United States of America
Saudi Arabia
Middle East
By Dharu
சவூதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிற்கு 48 F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பு இலக்குகளை வலுப்படுத்தும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தின் மதிப்பு
வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 24.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இதற்கிடையில், சவூதி அரேபியாவிற்குச் சொந்தமான F-15 ரக போர் விமானம் ஒன்றை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி அமைப்பு அறிவித்துள்ள சூழலில், அமெரிக்கா சவூதி அரேபியாவிற்கு 48 F-35 போர் விமானங்களை வழங்கியிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |