தலைமன்னார் கடற்பரப்பில் மில்லியன் கணக்கில் சிக்கிய போதைப் பொருள்கள்!
தலைமன்னார் (Talaimannar) கடற்பரப்பில் மிதந்து வந்த சுமார் 49 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் சிறி லங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று (28.03.2025) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
சிறப்பு கப்பல் ரோந்து குழு
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலைமன்னார், மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடையிலான கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு கப்பல் ரோந்து குழுவை நிலைநிறுத்தி சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 46 சந்தேகத்திற்கிடமான பொதிகளை அவதானித்து சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த சுமார் 124 கிலோகிராம் மற்றும் 392 கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என தெரிய கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
